ADDED : நவ 14, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக, 'சிசிடிவி கேமரா'க்களை பொருத்த பொதுப்பணி துறை முடிவெடுத்துள்ளது.
சென்னை கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பாலாஜிக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம், டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க, மருத்துவமனைகளில், 'சிசிடிவி கேமரா'க்களை பொருத்த வேண்டும் என்று, டாக்டர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனைகளை பராமரிக்கும் பொதுப்பணி துறை கவனத்திற்கு இப்பிரச்னையை, மக்கள் நல்வாழ்வு துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.
அதையடுத்து, கண்காணிப்பு கேமரா வசதி இல்லாத மருத்துவமனைகளில், அவற்றை உடனடியாக பொருத்த, பொதுப்பணி துறை முடிவு செய்துள்ளது.