நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க கணக்கெடுப்பு பணி துவக்கம்
நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க கணக்கெடுப்பு பணி துவக்கம்
ADDED : அக் 26, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ''மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க, கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது,'' என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் உள்ளன. புயல் உருவாவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நிவாரண முகாம், மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
கனமழை, இடி, மின்னல் தாக்கியதில் அக்., 1ம் தேதியில் இருந்து, 25ம் தேதி வரை, 31 பேர் உயிரிழந்துள்ளனர்; 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க, கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

