சூர்யதேவ் விளம்பர துாதர்களாக விளையாட்டு வீரர்கள் நியமனம்
சூர்யதேவ் விளம்பர துாதர்களாக விளையாட்டு வீரர்கள் நியமனம்
ADDED : டிச 24, 2024 07:04 AM
சென்னை : சூர்யதேவ் டி.எம்.டி., எக்கு தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர துாதர்களாக, கிரிக்கெட் வீரர் அஸ்வின், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக, சூர்யதேவ் டி.எம்.டி., நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள, தென்மாநிலங்களில் முக்கியமான எக்கு தயாரிப்பு நிறுவனமான, சூர்யதேவ் டி.எம்.டி., மூன்று சிறந்த விளையாட்டு வீரர்களை வைத்து, தன் தயாரிப்புகளை மக்களிடம் எடுத்து செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சிறந்த பந்து வீச்சாளரான அஸ்வினின் உள் வலிமை, நாட்டின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் சிதறாத கவனம், அறிவாற்றல், முன்னோடி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனின் தைரியம், மனஉறுதி ஆகிய சிறப்பு இயல்புகளை, சூர்யதேவ் டி.எம்.டி., கம்பிகள் பெற்றுள்ளன.
சூர்யதேவ் டி.எம்.டி., விளம்பர துாதராக, அதன் தயாரிப்புகளை பிரசாரம் செய்வது பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிப்பதாக, மூன்று விளையாட்டு வீரர்களும் தெரிவித்துள்ளனர். நம்பகத்தன்மை, நீடிப்பு தன்மை, உயர்தர பிராண்ட் ஆகியவை சூர்யதேவ் டி.எம்.டி., நிறுவனத்தின் சிறப்பம்சம்.
இதை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த, 'உள் வலிமை' பிரசார இயக்கத்தை முன்னெடுத்துள்ளோம். இதன் வாயிலாக எக்கு துறையில் வலுவான முத்திரை பதிப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.