தியாகம் பற்றி துரோகம் பேசுவதா? பன்னீர் செல்வம் கண்டனம்
தியாகம் பற்றி துரோகம் பேசுவதா? பன்னீர் செல்வம் கண்டனம்
ADDED : அக் 18, 2024 11:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தியாகம் பற்றி துரோகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: 45 சதவீதமாக இருந்த அ.தி.மு.க., ஓட்டு வங்கி இன்று 20 சதவீதமாக குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க முடியாது. அ.தி.மு.க., வீறுகொண்டு எழ பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் இணைய பண்புள்ள தலைமை தேவை.
தியாகம் பற்றி துரோகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது . 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்ற வேண்டும். அ.தி.மு.க.,வை ஆட்சி கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம். இவ்வாறு பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.