ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது; மக்கள் அதிர்ச்சி!
ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது; மக்கள் அதிர்ச்சி!
UPDATED : டிச 03, 2024 09:17 PM
ADDED : டிச 03, 2024 05:52 PM

திருவண்ணாமலை: தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, திருவண்ணாமலையில் ரூ.16 கோடியில் கட்டப்பட்டு செப்., மாதம் திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாத்தனூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது, தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் சிக்கல் நிலவியது. சுமார் 15 கி.மீ., தூரம் அவர்கள் சுற்றி, வேறு ஊர்களுக்கு சென்றனர்.
தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர அணை, பெஞ்சல் புயல் காரணமாக வேகமாக நிரம்பியது. இதனையடுத்து அந்த அணைக்கு வந்த சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், பல இடங்களை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.