ADDED : ஜன 29, 2026 02:46 AM

சென்னை: தமிழில் உருவாக்கப்பட்டுள்ள, 'சூப்பர் இன்டெலி ஜென்ட்' எனும் ஏ.ஐ., தொழில்நுட்பம், சென்னையில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழ் மொழி அடிப்படையிலான உலகின் முதல் சூப்பர் இன்டெலிஜென்ட் ஏ.ஐ., திட்டம் சார்ந்த அறிமுக நிகழ்ச்சி நாளை, சென்னை தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி., ஹோட்டலில் நடக்க உள்ளது.
இதில், 'போனெமிக் இன்டெலிஜென்ஸ்' கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பாஸ்கரன் பிள்ளை, தமிழ் இலக்கண, இலக்கியங்களான தொல்காப்பியம், நன்னுால், திருக்குறள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், அறிவியல் முறையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படும் விதம் குறித்து விளக்க உள்ளார்.
இந்த நிகழ்வில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு துறை வல்லுநர்கள், மருத்துவ ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

