'தமிழக நகரங்கள் அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளன' ; உதயநிதி பெருமிதம்
'தமிழக நகரங்கள் அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளன' ; உதயநிதி பெருமிதம்
UPDATED : பிப் 12, 2024 04:24 AM
ADDED : பிப் 12, 2024 04:22 AM

கோவை: கோவையில் வசிப்போருக்கு தினமும் குடிநீர் வழங்கும் வகையில், பில்லுார் மூன்றாவது திட்ட துவக்க விழா நேற்றுநடந்தது.
திட்டங்களை துவக்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
கோவை மக்களுக்கு, தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தோம். அதை இன்று நிறைவேற்றியுள்ளோம். இனி, இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கும். தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நகரங்களுக்கும், சீராக குடிநீர் வழங்குவதற்கான பணிகளை செய்து வருகிறோம்.
நகரங்களில், 2035ம் ஆண்டு என்ன மக்கள் தொகை இருக்கும்; 2050ம் ஆண்டு என்ன மக்கள் தொகை இருக்கும் என்பதையெல்லாம் இப்போதே கணித்து, திட்டங்களை வகுக்க வேண்டும். இதையெல்லாம் கணித்துதான், அதிக கவனம் எடுத்து செயலாற்றி வருகிறோம்.
தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல்,மதுரை, திருச்சி போன்ற நகரங்களும் வளர்ச்சி அடைந்திருக்கின்றன.
![]() |
தொழில், கல்வி, சுகாதாரம், நகர உள்கட்டமைப்பு வசதி என அனைத்து துறைகளிலும் நகரங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. மற்ற மாநிலங்களுக்கு மாடல் அரசாக, தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
கோவை மக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவெனில், அடுத்த இரு மாதங்கள் மிக மிக முக்கியமான காலம். சென்ற முறை சின்ன, சின்ன தவறுகள் நடந்திருந்தாலும், அவற்றை திருத்திக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.


