''தமிழ் மொழி சக்திவாய்ந்தது.. எல்லா மாநிலங்களுக்கும் எடுத்து செல்லணும்..'': கவர்னர் ரவி பேச்சு
''தமிழ் மொழி சக்திவாய்ந்தது.. எல்லா மாநிலங்களுக்கும் எடுத்து செல்லணும்..'': கவர்னர் ரவி பேச்சு
ADDED : செப் 03, 2024 12:09 PM

சென்னை: 'அனைத்து மாநிலங்களுக்கும் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் மொழி அழகான, சக்திவாய்ந்த மொழி' என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை அரும்பாக்கத்தில் தேசிய கருத்தரங்கு மற்றும் பரிசளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ் மொழியை எடுத்து செல்ல வேண்டும். தமிழ் பத்திரிகைகளை வாசிக்கிறேன். யாராவது தமிழில் பேசினால் புரிந்து கொள்கிறேன். தமிழ் மொழி அழகான, சக்திவாய்ந்த மொழி; அதை கற்றுக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்ப்பும்! ஆதரவும்!
சில தினங்களுக்கு முன்பு, ' மத்திய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில கல்வி குறித்த அவதூறு பேச்சுக்கு ரவி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் தங்கள் மாநில பாடத்திட்டத்தையும் தாண்டி சிந்திக்க வேண்டும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கற்க வேண்டும் என ரவி பேசியதை வழக்கம்போல் திரித்துப் பேசி அரசியாலக்க முயற்சி நடப்பதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.