sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்

/

தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்

தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்

தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்

8


ADDED : டிச 15, 2025 12:54 PM

Google News

ADDED : டிச 15, 2025 12:54 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி விருப்ப மனு வினியோகத்தை இன்று (டிச.,15) அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, இபிஎஸ் இடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும். டிசம்பர் மாதத்தின் மத்தியிலேயே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி விறுவிறுப்பு காட்டி வருகின்றன. ஏற்கனவே, அ.ம.மு.க.,வும் காங்கிரசும், விருப்ப மனு பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று (டிச.,15) தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, இபிஎஸ் இடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

கட்சியினர் வரும் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம். தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மனுக்களை பெறலாம். பூர்த்தி செய்து, 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us