தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தமிழ்நாடு பா.ஜ., ஏன் இன்னும் துாங்கிக் கொண்டிருக்கிறது?.. அந்துமணி பதில்கள்

தமிழ்நாடு பா.ஜ., ஏன் இன்னும் துாங்கிக் கொண்டிருக்கிறது?.. அந்துமணி பதில்கள்

தமிழ்நாடு பா.ஜ., ஏன் இன்னும் துாங்கிக் கொண்டிருக்கிறது?.. அந்துமணி பதில்கள்

16


ADDED : செப் 17, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 04:03 AM

16


16
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜி.சுப்பிரமணி, திண்டுக்கல்:


நாகையில், 33,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவிருந்த, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய பெரிய முதலீடுகள், தமிழகத்தை விட்டுச் செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?



தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டங்களுக்கு, 'எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்; இது எங்கள் இடம்' என்றெல்லாம், மக்கள் முட்டுக்கட்டை போடாமல், அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

வி.மோகன், கடலுார்:


தி.மு.க.,வின் ஆ.ராஜா பேச்சுக்கு, அக்கட்சியின் எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?



பண்பட்ட அரசியல்வாதியாகவும், மனித நேயம் மிக்கவராகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறார் கனிமொழி.

பி.இசக்கி, தென்காசி:


புதிய தலைமைச் செயலகம் கட்டினால் அரசு மருத்துவமனையாகி விடும் என, அ.தி.மு.க., ஜெயகுமார் கூறுகிறாரே?



ஜெயகுமாரின் கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதா, தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி கட்டிய ஓமந்துாரர் மாளிகையை அரசு மருத்துவமனையாக மாற்றியதைப் போல, இப்போதும் நடக்கும் எனச் சொல்கிறார். பழைய அரசியலைக் குப்பையில் போட்டு, 'மைக்' ஜெயகுமார், புதிதாக சிந்திக்கவில்லை எனில், இவர் கதி அதோ கதியாகிவிடும் என்பதை, அறியாதவராக இருக்கிறாரே!

வி.வைத்தியநாதன், சென்னை.


பதில் தெரிய அந்துமணியார், செயற்கை நுண்ணறிவு எனப்படும், ஏ.ஐ., உதவியை நாடியது உண்டா?



ஏ.ஐ., எதற்கு? நம் நாளிதழை தினமும் படித்தால் போதுமே வைத்தியநாதன்!

வி.மாசிலாமணி, கடலுார்:


அவதுாறு பேச்சு குறித்து வழக்குப் பதிந்து இதுவரை யாரும் தண்டனை பெற்றதாக தெரியவில்லையே?



ஒருமுறை சிலர் கடுமையாக தண்டிக்கப்படட்டும், அதன்பின் பாருங்கள்... அனைவரும், 'கப்சிப்' ஆகிவிடுவர்.

கே.ராம்குமார், கோவை:


பிரதமர் மோடி, இவ்வளவு சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு பா.ஜ., ஏன் இன்னும் துாங்கிக் கொண்டிருக்கிறது?



தமிழக பா.ஜ.,வுக்கு சுறுசுறுப்பான தலைமை இன்னும் கிடைக்கவில்லை. வேகமாக, சாதுர்யமாக, மத்திய அரசு செய்யும் நலத் திட்டங்களை ஆணித் தரமாக, சாமானிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் திறன் தமிழக தலைவர்கள் யாரிடமும் இல்லை; வெள்ளை வேட்டி - சட்டை போட்டு அல்லது புடவையே கசங்காமல், அலுங்காமல், குலுங்காமல், போட்டோவுக்கு போஸ் கொடுத்து, பேட்டிகள் கொடுப் பதற்கு மட்டும் தான் இவர்களால் முடிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us