தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
ADDED : பிப் 04, 2024 05:04 PM

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஸ்பெய்னில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக சட்டசபை கூட்டம், வரும், 12ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 10:00 மணிக்கு, கவர்னர் ரவி உரையாற்ற உள்ளார். 19ம் தேதி 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 12ம் துவங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், 19ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை குறித்தும் நிதித்துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சித்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஸ்பெய்னில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.