sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி

/

அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி

அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி

அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி

2


ADDED : மார் 21, 2026 02:31 AM

Google News

2

ADDED : மார் 21, 2026 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சமூக வலைதளங்களில், ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக்கூடிய பதிவுகள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில், அரசியல் விளம்பரங்களை வெளியிட, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், மாநில அல்லது மாவட்ட அளவிலான, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம், முன் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். இதற்கு, குறைந்தது மூன்று நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு வாயிலாக உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட, அனைத்து வீடியோக்களிலும், ஏ.ஐ., வாயிலாக உருவாக்கப்பட்டது, டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது, செயற்கை உள்ளடக்கம் போன்ற தெளிவான லேபிள்கள் இருக்க வேண்டும்.

ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக் கூடிய உள்ளடக்கங்கள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின், சமூக வலைதள பக்கங்களில், இத்தகைய தவறான அல்லது சட்ட விரோத வீடியோக்கள் கண்டறியப்பட்டால், மூன்று மணி நேரத்திற்குள், அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் அறிக்கை: தமிழகத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான, ஆண்டு ஊதியம் 6,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கூடுதலாக எஸ்.ஐ.ஆர்., பணிக்கு 2,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுவசதி சங்க வளாகங்களில், தேர்தல் கமிஷன் ஓட்டுச்சாவடிகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, சென்னையில் ஐந்து, திருவள்ளூரில் நான்கு, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் தலா இரண்டு, மதுரையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு என, 14 இடங்களில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us