அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
UPDATED : ஆக 28, 2025 12:56 PM
ADDED : ஆக 28, 2025 11:09 AM

சென்னை: ''அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.
தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணங்களை மத்திய அரசு வழங்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தக பாதிப்பு ஏற்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியை மேற்கோள் காட்டி சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: அமெரிக்க வரியால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. திருப்பூரில் ரூ.3 ஆயிரம் கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
தமிழக தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.