ADDED : அக் 17, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகம் முழுதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, தீபாவளிக்கு மறுநாளான, 21ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை, வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.
அவர்கள் நலன் கருதி, தீபாவளிக்கு மறுநாளான, 21ம் தேதி மட்டும், தமிழகம் முழுதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் கல்வி நிறுவனங் களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில், வரும் 25ம் தேதி பணி நாளாக அறிவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.