sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓய்வூதிய இயக்குனரகம் உள்ளிட்ட 3 துறைகளை மூடியது தமிழக அரசு

/

ஓய்வூதிய இயக்குனரகம் உள்ளிட்ட 3 துறைகளை மூடியது தமிழக அரசு

ஓய்வூதிய இயக்குனரகம் உள்ளிட்ட 3 துறைகளை மூடியது தமிழக அரசு

ஓய்வூதிய இயக்குனரகம் உள்ளிட்ட 3 துறைகளை மூடியது தமிழக அரசு

14


ADDED : நவ 17, 2024 03:35 AM

Google News

ADDED : நவ 17, 2024 03:35 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் ஆகியவை, கருவூலங்கள் கணக்கு துறையுடன் இணைக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை, அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் போன்றவற்றின் செயல் திறனை மேம்படுத்த, அத்துறைகள் சீரமைக்கப்படும் என, 2022ல் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

பதவிகள் ஒழிப்பு


அதன்படி, ஓய்வூதிய இயக்குனரகம், தகவல் தொகுப்பு விபர மையம் போன்றவை, கருவூலங்கள் கணக்கு துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓய்வூதிய இயக்குனர், தகவல் தொகுப்பு மைய கமிஷனர் பதவிகள் ஒழிக்கப்பட்டு உள்ளன.

அதேபோல, சிறு சேமிப்பு துறையும், கருவூலங்கள் கணக்கு துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான அரசாணைகளை, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் வெளியிட்டு உள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு ஓய்வூதியர் இயக்குனரகத்தை, அரசு ஒழித்துக் கட்டியுள்ளது. ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க, ஓய்வூதிய இயக்குனரால் மாவட்டந் தோறும் நடத்தப்படும் குறை தீர் கூட்டம், இனி கருவூல கணக்குத்துறை ஆணையரால் கூடுதலாக நிர்வகிக்கப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை, தி.மு.க., அரசு நிறைவேற்றாது என்பதற்கு கட்டியம் கூறும் வகையில், ஓய்வூதிய இயக்குனரகத்தை, கருவூலங்கள் கணக்கு துறையுடன் இணைத்திருக்கும் நடவடிக்கை உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பொறுத்தவரை, வாக்குறுதிகள் எள்ளளவும் நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய ஓய்வூதிய இயக்குனரகம் இணைப்பு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோருக்கு, இனிமேல் ஓய்வூதியம் என்பது கானல் நீர்தான் என்பதை, தமிழக அரசு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

இதற்கு மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தமிழக அரசின் ஊழியர் விரோத போக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டர் என்பது திண்ணம்.

ஏழு லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில், 90 சதவீதம் கருவூலங்கள் கணக்குத் துறையின் செயல்பாடுகளால்தான் ஏற்படுகின்றன.

ஏற்புடையதல்ல


இவற்றுக்கு தீர்வு காண, தனி இயக்குனர் இல்லாமல், கருவூலங்கள் கணக்குத் துறை தலைவரே, ஏற்கனவே உள்ள பொறுப்புகளோடு, இதையும் சேர்த்து கவனிப்பார் என்பது ஏற்புடையதல்ல.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்து, எந்த வாக்குறுதியையும் வழங்காததற்கும், தி.மு.க., அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கும், எந்த வேறுபாடும் இல்லை.

முதல்வர் உடனடியாக, நிதித்துறை வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, ஓய்வூதிய இயக்குனரகம் பழைய நிலையிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us