sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு 

/

 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு 

 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு 

 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு 

18


ADDED : ஜன 11, 2026 04:45 AM

Google News

ADDED : ஜன 11, 2026 04:45 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக அரசு அறிவித்த, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, டி.ஏ.பி.எஸ்., எனப்படும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் கடந்த 3ம் தேதி அறிவித்தார். தொடர்ந்து, 6ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கான அரசாணையை, தமிழக நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், கடந்த 2003 ஏப்ரல் 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த 2004 ஜனவரி 1ம் தேதி, தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தையே தமிழக அரசு செயல்படுத்தியது.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, தமிழகத்திற்கு பொறுத்தமானதை பரிந்துரைக்க, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவை, தமிழக அரசு அமைத்தது.

இக்குழு, கடந்த டிசம்பர் 30ம் தேதி தன் பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. கவனமாக ஆய்வு செய்த தமிழக அரசு, 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. இத்திட்டம், 2026 ஜனவரி 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, அனைத்து தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கும், கடைசியாக பெற்ற மாதச் சம்பளத்தில், 50 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இதற்காக, அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில், 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதற்கான கூடுதல் நிதியை தமிழக அரசு ஏற்கும்.

ஓய்வூதியதாரர் இறந்தால், அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில், 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

ஓய்வு பெற்றாலோ அல்லது இறந்தாலோ, 25 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்கப்படும். இந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன், ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

இம்மாதம் 1 முதல், தமிழக அரசு பணியில் சேரும் அனைத்து தகுதியுள்ள ஊழியர்களுக்கும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கட்டாயமாகும்.

ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்கு பின் ஓய்வுபெறும் அனைத்து தகுதியுள்ள அரசு ஊழியர்களும், இத்திட்டத்தின் கீழ் வருவர்.

கடந்த 1ம் தேதிக்கு முன் பணியில் இருந்த அனைத்து அரசு ஊழியர்கள்,​​உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அல்லது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விரிவான விதிகள், தகுதி நிபந்தனைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், செயல்படுத்தல் நடைமுறைகள் தனித்தனியாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us