கல்வி நிதியை வழங்க கோரி தமிழக அரசு மனு: ஆக.,1ல் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை
கல்வி நிதியை வழங்க கோரி தமிழக அரசு மனு: ஆக.,1ல் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை
ADDED : ஜூலை 30, 2025 10:24 AM

புதுடில்லி: தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக்கோரிய வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது.
தமிழகத்துக்கான, 2024 - 2025ம் ஆண்டுக்கான சமக்ர சிக் ஷா நிதியான, 2,152 கோடி ரூபாயையும், கட்டாய கல்வி நிதியான, 617 கோடி ரூபாயையும், இந்தாண்டுக்கான முதல் பருவ நிதியையும் வழங்கும்படி வலியுறுத்தி, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் மனு அளித்தார்.
இந்நிலையில், தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக்கோரிய சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுவில் தமிழக அரசு, ''கல்வி திட்டத்துக்கான நிலுவை நிதி வழங்கப்படவில்லை. சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும்.
கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளதால், 48 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை, ஆகஸ்ட் 1ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.