அனைவரையும் மது குடிக்க வைக்க தமிழக அரசு 'டார்கெட்': நயினார் நாகேந்திரன்
அனைவரையும் மது குடிக்க வைக்க தமிழக அரசு 'டார்கெட்': நயினார் நாகேந்திரன்
ADDED : அக் 27, 2025 07:35 PM

காரைக்குடி: ''தமிழக அரசு, அனைவரையும் அதிகமாக குடிக்க வைக்க வேண்டும் என்று ரூ.600 கோடி டார்கெட் செய்திருந்தது. அதையும் தாண்டி மதுவிற்பனை ரூ.750 கோடி சென்று விட்டது'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
காரைக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் சரிபார்ப்பு முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்து நடக்கிறது. தற்போது முதல்வர் ஸ்டாலின் வாக்காளர் சரிபார்ப்பு குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதற்குக் காரணம் அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தோல்வி பயம் இல்லையென்றால் 'இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.
தமிழக அரசு, அனைவரையும் அதிகமாக குடிக்க வைக்க வேண்டும் என்று ரூ.600 கோடி டார்கெட் செய்திருந்தது. அதையும் தாண்டி மதுவிற்பனை ரூ.750 கோடி சென்று விட்டது.
கடந்த ஜூன் மாதம் 6.30 லட்சம் ஏக்கர் பயிர் நடப்பட்டு செப்.5 ஆம் தேதி அறுவடை செய்வது குறித்து முதல்வருக்கு முன்கூட்டியே தெரியும். தெரிந்திருந்தும் அவர், 60 சதவீதம் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. ஆனால் வேளாண்துறை அமைச்சர் பருவமழை திடீரென்று வந்ததாக கூறுகிறார்.
முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல்ராஜன், சட்டசபையில் பேசும்போது பருவகால நிலையை அறிந்து கொள்ள ரூ 10, கோடிக்கு தொழில்நுட்ப இயந்திரங்கள் வாங்கியதாக தெரிவித்தார். அவை எங்கே இருக்கிறது. முன்னாள் நிதியமைச்சர் கூறியது பொய்யா?. இல்லை வேளாண்மை அமைச்சர் சொல்வது பொய்யா?. அனைத்துமே பொய்யாகத் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

