ஒப்பந்ததாரர்கள் உழைப்பால் தமிழகம் மாறியுள்ளது: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
ஒப்பந்ததாரர்கள் உழைப்பால் தமிழகம் மாறியுள்ளது: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
ADDED : ஆக 29, 2025 01:50 AM

சென்னை, ஆக. 29-
“ஒப்பந்ததாரர்கள் உழைப்பால், அதிநவீன கட்டமைப்புகள் கொண்டதாக தமிழகம் மாறியுள் ளது,” என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின், இரண்டாவது மாநில மாநாடு மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமான இயந்திரங்களின் வர்த்தக கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. இவற்றை துவக்கி வைத்து, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
அரசின் வாக்குறுதிகளை செயல் வடிவமாக்குவதும், காகிதங்களில் வரைபடமாக இருக்கும் திட்டங்களை, ஏழு சாலைகளாகவும், மேம்பாலங்களாகவும் மாற்றி காட்டுவதும் ஒப்பந்ததாரர்கள் தான். அவர்களின் உழைப்பால், அதிநவீன கட்டமைப்புகள் கொண்டதாக தமிழகம் மாறியுள்ளது.
வழிகாட்டி வெளிநாட்டு நிறுவனங்கள், தொழில் துவங்க முதலில் வரும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்குள்ள உள்கட்டமைப்பு, சாலை இணைப்பு வசதிகள், நாட்டிற்கே வழிகாட்டியாக உள்ளன. நெடுஞ்சாலைத் துறை, 37 கோடி ரூபாயில், கன்னியாகுமரியில் கண்ணாடி மேம்பாலம் கட்டி உள்ளது.
சென்னையில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கு மேல், உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.
மதுரை கோரிப்பாளையம், வேலுார் சத்துவாச்சேரி உட்பட பல்வேறு இடங்களில், 100 ஆண்டுகளுக்கு தேவையான மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க., ஆட்சியில், 2021ம் ஆண்டு வரை 1,074 ஒப்பந்ததாரர்கள் மட்டுமே நெடுஞ்சாலைத் துறையில் இருந்தனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், ஒப்பந்ததாரர் பதிவு எளிமையாக்கப்பட்டது.
புதிதாக 1,300 பேர் இதனால், நான்கு ஆண்டுகளில், 1,300 ஒப் பந்ததாரர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் கோரிக்கையை ஏற்று, ஐந்தாண்டு கால பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தை பல உயரங்களுக்கு, முதல்வர் கொண்டு செல்வார். அதற்கு அனைத்து துறை ஒப்பந்ததாரர்களும் ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பேசியதாவது:
மாநில நெடுஞ்சாலை துறை வாயிலாக, 68,180 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 820 கி.மீ., சாலைகள் நான்கு வழித்தடமாகவும், 2,020 கி.மீ., சாலைகள் இரண்டு வழித்தடமாகவும் மாற்றப்பட்டு உள்ளன.
போனஸ் மேலும், 1,197 தரைப்பாலங்கள், உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டு உள்ளன. குறித்த காலத்தில் பணி முடிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு, 1 சதவீதம் போனஸ் வழங்கப் படுகிறது. 'பசுமையான சாலைகள், பாதுகாப்பான பயணம்' என்பதை இலக்காக வைத்து, ஆண்டுதோறும் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.
மூன்று ஆண்டுகளாக கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்து வருகின்றன. இதை ஒப்பந்ததாரர்கள் சமாளிக்கும் வகையில், ஆண்டு தோறும் ஒப்பந்த விலைப்பட்டியல் உயர்த்தி தரப்படுகிறது. பீஹார் சென்று வந்ததால், முதல்வருக்கு சிறிய உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அதனால், அவரால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.
இவ்வாறு அமைச்சர் வேலு பேசினார்.