நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் மீண்டும் முதலிடம்
நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் மீண்டும் முதலிடம்
ADDED : ஏப் 25, 2025 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்த நிதியாண்டு, நாட்டின் மொத்த ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியில், அதிக பங்களிப்பு வழங்கிய மாநிலங்களில், தமிழகம் மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளது. குஜராத் இரண்டாமிடமும், மஹாராஷ்டிரா மூன்றாமிடமும் பிடித்து உள்ளன.
தமிழகத்தில் இருந்து ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பிற்கு, நாட்டின் பிற பகுதியை காட்டிலும், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதியில் உள்ள வலுவான கட்டமைப்பு, திறன் வாய்ந்த தொழிலாளர்கள் காரணமாகும். குறிப்பாக, திருப்பூர் கிளஸ்டரின் பங்களிப்பு மிக அதிகம்.