ADDED : ஜன 20, 2025 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக காவல் துறையின் ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
கடந்த, 1994ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால், தமிழக காவல் துறையில் ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வருகிறார்.
அவரை, மத்திய அரசு பணியான, பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குனர் ஜெனரலாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இப்பணியில் அவர் நான்கு ஆண்டுகள் இருப்பார்.
அவரை விரைவாக தமிழக பணியில் இருந்து விடுவிக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.