நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை; முதல் 100 இடங்களில் 6 பேர்!
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை; முதல் 100 இடங்களில் 6 பேர்!
UPDATED : ஜூன் 14, 2025 03:04 PM
ADDED : ஜூன் 14, 2025 02:45 PM

புதுடில்லி: நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவர்கள் இடம் பெற்று அசத்தி உள்ளனர்.
இளநிலை மருத்து படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (என்.டி.ஏ.,) இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 22,09,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 12,36,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
* 551 முதல் 600 மதிப்பெண்கள் வரை 10,658 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
* 601 முதல் 650 மதிப்பெண்கள் வரை 1,259 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
* 651 முதல் 686 மதிப்பெண்கள் வரை 73 மாணவர்கள் பெ ற்றுள்ளனர்.
தமிழகத்தில் 1,35,715 மாணவர்கள் எழுதினர். இவர்களில், 76,181 பேர் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர்.
தமிழக மாணவர்கள் சாதனை
6 தமிழக மாணவர்கள் தேசிய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புஷ்பலதா பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 27வது இடமும் பிடித்துள்ளார்.
* அபிநித் நாகராஜன்- 50வது இடம்
* புகழேந்தி- 61 வது இடம்
* ஹிருதிக்- 63வது இடம்
* ராகேஷ்- 78வது இடம்
* பிரஜன் ஸ்ரீவாரி- 88வது இடம்