sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் வெளுத்து வாங்கியது மழை; கனமழையில் காரைக்குடி 'டாப்'

/

தமிழகத்தில் வெளுத்து வாங்கியது மழை; கனமழையில் காரைக்குடி 'டாப்'

தமிழகத்தில் வெளுத்து வாங்கியது மழை; கனமழையில் காரைக்குடி 'டாப்'

தமிழகத்தில் வெளுத்து வாங்கியது மழை; கனமழையில் காரைக்குடி 'டாப்'

2


UPDATED : அக் 12, 2024 09:40 AM

ADDED : அக் 12, 2024 08:36 AM

Google News

UPDATED : அக் 12, 2024 09:40 AM ADDED : அக் 12, 2024 08:36 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. காரைக்குடியில் அதிகபட்சமாக, 154 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அரியக்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதை உள்ளது. நேற்று பெய்த கனமழையில் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுரங்கப் பாதை தண்ணீரில் இறந்த நிலையில் ஒருவரது உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதிகளில் கனமழை. மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், இன்று (அக்., 12) காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம், மில்லி மீட்டரில்:

ஈரோடு மாவட்டம்


ஈரோடு- 77,

வரட்டு பள்ளம்- 68.8,

அம்மாபேட்டை 58.4

பவானி 38

மொடக்குறிச்சி 37

தாளப்பாடி 26.4

குண்டேரி பள்ளம் 25.2

சத்தியமங்கலம் 16

தர்மபுரி மாவட்டம்


பென்னாகரம் 27.2

ஒகேனக்கல் வனப்பகுதி 10.6

கரூர் மாவட்டம்


பஞ்சப்பட்டி 39.2

மாயனூர் 36.6

பாலவிடுதி 20

தோகைமலை 20

மைலம்பட்டி 18

நாமக்கல் மாவட்டம்


சேந்தமங்கலம் 43

குமாரபாளையம் 38.2

திருச்செங்கோடு 26

நாமக்கல் 17

சேலம் மாவட்டம்


எடப்பாடி 64.2

சங்ககிரி 34.4

தலைவாசல் 21

நீலகிரி மாவட்டம்




கோடநாடு 52

சாம்ராஜ் எஸ்டேட் 19

திருப்பூர் மாவட்டம்


மடத்துக்குளம் 46

காங்கேயம் 34

வெள்ளகோவில் 27.2

திருமூர்த்தி அணை 26

நல்லதங்காள் ஓடை அணை 25

திருப்பூர் வடக்கு 22

அமராவதி அணை 21

உடுமலை 21

தாராபுரம் 19

உப்பாறு அணை 19

குண்டடம் 18

சென்னை


ராயபுரம் 26.7

மணலி 23.1

டி வி கே நகர் 20.4

திருவொற்றியூர் 18

பெருங்குடி 17.6

கோவை மாவட்டம்


சோலையார் 59

சின்னக்கல்லார் 49

சின்கோனா 42

வாரப்பட்டி 34

மாக்கினாம்பட்டி 32

பெரியநாயக்கன்பாளையம் 29.4

பொள்ளாச்சி 25

வால்பாறை 24

கோவை தெற்கு தாலுக்கா ஆபீஸ் 22

சூலூர் 19.4

கிணத்துக்கடவு 18

கன்னியாகுமரி மாவட்டம்


குருந்தன்கோடு 103

குளச்சல் 89

இரணியல் 68

அடையாமடை 64

திற்பரப்பு 57

தக்கலை 57

முள்ளங்கி விளை 53.2

மாம்பழத்துறையாறு 43

பேச்சிப்பாறை 42.8

நாகர்கோவில் 40

குழித்துறை 32

சிவகங்கை மாவட்டம்


காரைக்குடி 154

சிவகங்கை 52

சிங்கம்புணரி 33

திருப்பத்தூர் 32

தேவகோட்டை 26

திருப்புவனம் 22

தேனி மாவட்டம்


பெரியகுளம் 43

சோத்துப்பாறை 32

மஞ்சளார் 26

வைகை அணை 21

தூத்துக்குடி மாவட்டம்


கடம்பூர் 68

கயத்தார் 27

விருதுநகர் மாவட்டம்


வத்திராயிருப்பு 57.6

காரியாபட்டி 52.4

பெரியார் அணை 38.6

ராஜபாளையம் 34

ஸ்ரீவில்லிபுத்தூர் 25.4






      Dinamalar
      Follow us