நிர்வாக சீர்குலைவைத் தமிழகம் இனியும் தாங்காது: அண்ணாமலை
நிர்வாக சீர்குலைவைத் தமிழகம் இனியும் தாங்காது: அண்ணாமலை
ADDED : டிச 31, 2025 09:28 PM

சென்னை: '' நிர்வாக சீர்குலைவை தமிழகம் இனியும் தாங்கிக் கொள்ளாது,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவையில் வாகனம் மோதியதை தட்டிக்கேட்ட ஒரே காரணத்துக்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான சுராஜ் என்பவர் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கையில் பணிபுரிந்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த மோனிஷ் ஸேரன், சுஷாந்த கோஹோரி ஆகிய இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள், நேற்று இரவு கஞ்சா போதையில் இருந்த கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
திமுகவின் பிரிவினைவாத அரசியலால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. வெறுப்புணர்வு இயல்பாக்கப்படுவதும் அரசியல் லாபத்துக்காக ஒருவரது அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்போதும் வன்முறை நிகழ்வது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது. இத்தகைய நிர்வாக சீர்குலைவைத் தமிழகம்இனியும் தாங்கிக்கொள்ளாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

