சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல் தமிழகத்தின் வளர்ச்சி: அண்ணாமலை கிண்டல்
சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல் தமிழகத்தின் வளர்ச்சி: அண்ணாமலை கிண்டல்
UPDATED : பிப் 04, 2024 05:28 PM
ADDED : பிப் 04, 2024 04:03 PM

வேலூர்: தமிழகத்தின் வளர்ச்சி என்பது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல் உள்ளது. என வேலூரில் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் அண்ணாமலை பேசுகையில் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது: மோடியை எதிர்த்து இன்றைக்கு வேட்பாளர்கள் இல்லை. பாஜ, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை உங்கள் வீட்டை கதவை வந்து தட்டும். அமைச்சர் துரை முருகனின் மகன் எம்.பி கதிர் ஆனந்த் 5 ஆண்டுகளாக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. நிதி நிர்வாகம் குறித்து அமைச்சர் துரை முருகனை விட எனக்கு நன்றாக தெரியும். தமிழகத்தின் வளர்ச்சி என்பது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல் உள்ளது.
மத்தியில், ஊழலற்ற நல்லாட்சி தொடர்ந்திட, குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு, வேலூரின் வளர்ச்சிக்கு, மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வேண்டும். தமிழகம் முழுவதும் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். தமிழகத்தில், இத்தனை ஆண்டு காலமாக, மத அரசியலும், ஜாதி அரசியலும் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
திருப்பூரில் தங்கி பணிபுரிந்த 60 ஆயிரம் உத்திரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி அடைந்து இருப்பதால் அங்கு திரும்பி சென்றுவிட்டனர். வடமாநிலத்தவரை கேலி செய்த தி.மு.க., எப்படி சமாளிக்கப்போகிறது?. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.