sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

/

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

7


UPDATED : ஏப் 14, 2025 05:42 AM

ADDED : ஏப் 13, 2025 08:24 PM

Google News

UPDATED : ஏப் 14, 2025 05:42 AM ADDED : ஏப் 13, 2025 08:24 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழ் புத்தாண்டிற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

அறுவடை திருநாள், புத்தாண்டை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அனைவரின் பசி போக்கும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த பண்டிகைகள், இயற்கை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு இந்த பண்டிகைகள் மிகச் சிறந்த ஊக்கமளிக்கட்டும் என வாழ்த்துவதாக, ஜனாதிபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும். புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். அமிர்தகாலத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் 2047க்கான வளர்ந்த தமிழகத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்

புதிய நம்பிக்கையோடு கூடிய உத்வேகம் பிறக்கட்டும். இனிய 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அன்புமணி உள்பட பலர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாழ்த்துக்கள் வாசகர்களே!

தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.



சித்திரை திருநாள் (தமிழ்ப் புத்தாண்டு) என்றால் என்ன?

* தமிழ்ப் புத்தாண்டு அன்று, புத்தாடை அணிந்து கோவிலுக்கு செல்வது, பொங்கல் வைத்து வழிபடுவது, உறவினர்களுக்கு இனிப்பு வழங்குவது, பெரியோரிடம் ஆசி பெறுவது வழக்கம்.

* தாம்பாளத் தட்டில், முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் பிற பழங்கள், ஒரு எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு, பூக்கள், மஞ்சள், குங்குமம், நகைகள், ரூபாய் நோட்டுக் கட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றை, கடவுள் படத்தின் முன் வைத்துக் கொள்ள வேண்டும். புத்தாண்டு அன்று காலை எழுந்தவுடன், தாம்பாளத் தட்டில் உள்ள கனிகளை பார்த்தபடி கண்விழிக்க வேண்டும்.

* அறுசுவை சமையல் செய்து, இறைவனுக்கு படைத்து உண்ண வேண்டும்.

* வீட்டில் இருக்கும் முதியவர்கள், வயதில் சிறியவர்களுக்கு பணம் கொடுத்து வாழ்த்துவது வழக்கம்






      Dinamalar
      Follow us