உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 16, 2026 06:23 AM
அ நிறம் | அளவு
சென்னை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திருமுறை பாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில், தமிழ் ஓதுவார்கள் சங்கத்தினர் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கும்பாபிஷேகப் பணிகளின்போது தேவாரம், திருவாசகம் பாடப் போதிய அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அன்னை தமிழுக்கும் திருமுறைகளுக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
