sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

/

மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

1


ADDED : ஏப் 05, 2025 08:21 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 08:21 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்தது.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. அனலுடன் கூடிய காற்றால் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று கோவை, திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல மணிநேரம் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கரட்டூர், கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை தொடர்ந்து நீடித்ததால் அங்கு சிலமணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்தது. திடீர் மழையால் வெப்பம் தணிய, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சூறாவளியுடன் மழை கொட்டியதில் அங்குள்ள சில கடைகளின் பெயர் பலகைகள், தகர ஷீட்டுகள் காற்றில் பறந்தன. மின்சார விநியோகமும் சிறிதுநேரம் தடைபட்டது.

தேனி மாவட்டம் கம்பம், திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. கோவையில் புறநகர் பகுதியில் மழை கொட்டியதில் ஆங்காங்கே மரங்களின் கிளைகளும் ஒடிந்து விழுந்தன.

தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் (மில்லி மீட்டரில்)

ஈரோடு மாவட்டம்

கோபிசெட்டிபாளையம் 155.2

எலந்த குட்டை மேடு 100.4

கவுந்தப்பாடி 91.4

நம்பியூர் 79

கொடிவேரி 52.2

வரட்டு பள்ளம் 51.2

அம்மாபேட்டை 50.6

பவானிசாகர் 39.4

சென்னிமலை 39

குண்டேரி பள்ளம் 29.4

சத்தியமங்கலம் 23

பவானி 19

கன்னியாகுமரி மாவட்டம்

கோழிப்போர்விளை 195

அடையாமடை 128.4

பேச்சுப்பாறை 125.4

குளச்சல் 104

இரணியல் 74

சுருளக்கோடு 61.4

சித்தார் 60.2

மாம்பழத்துறையாறு 57

ஆனைக்கிடங்கு 55.6

தக்கலை 49

பாலாமூர் 38

பெருஞ்சாணி 37.6

குழித்துறை 32.4

கிருஷ்ணகிரி மாவட்டம்

தேன்கனிக்கோட்டை 36

தளி 20

ராமநாதபுரம் மாவட்டம்

ராமேஸ்வரம் 65.4

கடலாடி 52

முதுகுளத்தூர் 23

பாம்பன் 22

தேனி மாவட்டம்

சேத்துப்பாறை 86

பெரியகுளம் 61

உத்தமபாளையம் 54.6

மஞ்சளாறு 43

ஆண்டிபட்டி 43

திருப்பூர் மாவட்டம்

கலெக்டர் முகாம் அலுவலகம் 150

கலெக்டர் அலுவலகம் 131

ஊத்துக்குளி 120

வடக்கு தாலுகா அலுவலகம் 110

தெற்கு தாலுகா அலுவலகம் 96

அவிநாசி 75

பல்லடம் 28

திருமூர்த்தி அணை 25

கோவை மாவட்டம்

பீளமேடு விமான நிலையம் 78.6

சூலூர் 76.4

அன்னூர் 75.2

வேளாண் பல்கலை 69

பெரியநாயக்கன்பாளையம் 62.4

போத்தனூர் 54

தொண்டாமுத்தூர் 48

சின்கோனா 37

மதுக்கரை 33

வாரப்பட்டி 33

சின்னக்கல்லார் 26

சிறுவாணி அடிவாரம் 22

தெற்கு தாலுக்கா ஆபீஸ் 21.2

மாக்கினாம்பட்டி 19.5

தென்காசி மாவட்டம்

ராமநதி அணை 65

கடனா அணை 62

செங்கோட்டை 46.4

குண்டாறு அணை 32

அடவி நைனார் கோவில் அணை 15

நீலகிரி மாவட்டம்

கீழ்கோத்தகிரி எஸ்டேட் 90

நடுவட்டம் 64

பார்வுட் 54

கிண்ணக்கொரை 42

கிளன்மார்கன் 41

குந்தா பாலம் 40

ஊட்டி 38

கொடநாடு 38

எமரால்டு 35

அப்பர் பவானி 30

அப்பர் கூடலூர் 25

கோத்தகிரி 24

தூத்துக்குடி மாவட்டம்

கழுகுமலை 36

ஸ்ரீவைகுண்டம் 21

திருநெல்வேலி மாவட்டம்

ஊத்து 68

நம்பியார் அணை 68

நாலு முக்கு 58

கக்கச்சி 54

பாபநாசம் 49

மாஞ்சோலை 48

சேர்வலார் அணை 47

மணிமுத்தாறு 32.4

கொடுமுடியாறு அணை 27

அம்பாசமுத்திரம் 11.8

திருவண்ணாமலை மாவட்டம்

செங்கம் 42.6

வேம்பாக்கம் 25

செய்யாறு 18

விருதுநகர் மாவட்டம்


வத்திராயிருப்பு 39 ஸ்ரீவில்லிபுத்தூர் 12.2 சாத்தூர் 11

தர்மபுரி மாவட்டம்


ஒகேனக்கல் 48 மாரண்டஹள்ளி 12

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் 62.5 கொடைக்கானல் படகு இல்லம் 26.6

கொடைக்கானல் 14.5

மதுரை மாவட்டம்


ஆண்டிப்பட்டி 39 சோழவந்தான் 25 வாடிப்பட்டி 20

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை 27.6






      Dinamalar
      Follow us