சூலுார் வானில் சூப்பர் கோலம்; ஹெலிகாப்டரில் அசத்திய போர் விமானிகள்!
சூலுார் வானில் சூப்பர் கோலம்; ஹெலிகாப்டரில் அசத்திய போர் விமானிகள்!
UPDATED : ஆக 13, 2024 01:26 PM
ADDED : ஆக 13, 2024 01:19 PM

கோவை: சர்வதேச ராணுவ விமான தளவாட கண்காட்சியை முன்னிட்டு, கோவை சூலுார் தளத்தில், ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடந்தது. விமானப்படை வீரர்கள், துப்பாக்கியை வீசிப்பிடித்து சாகசம் செய்து அசத்தினர்.
இந்திய விமானப்படை சார்பில், 61 ஆண்டுகளுக்கு பிறகு, 'தாரங் சக்தி 2024' என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி, இந்தியாவில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.


சாகச நிகழ்ச்சிகள்
ஆக., 6ம் தேதி முதல் விமான பயிற்சியில் இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்று, ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் தேஜஸ், ஜெர்மனியின் டைபூன் உள்ளிட்ட உயர் ரக போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. இந்திய விமான படையின் சார்ங், லைட் காம்பேட் ஹெலிகாப்டர், தேஜாஸ் மற்றும் ஐரோப்பிய போர் விமானமான டைப்பூன் உள்ளிட்ட விமானிகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய விமானப்படை வீரர்கள், துப்பாக்கியை வீசிப்பிடித்து சாகசம் செய்தும் அசத்தினர்.

ஆக.,15ல் மக்கள் பார்க்க அனுமதி!
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சியை தமிழக கவர்னர் ரவி துவக்கி வைத்தார். 62 அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.


