தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ டாஸ்மாக் மதுபான கொள்முதலில் மாற்றம்: அதிகமாக விற்கும் சரக்குகளுக்கு முன்னுரிமை

 டாஸ்மாக் மதுபான கொள்முதலில் மாற்றம்: அதிகமாக விற்கும் சரக்குகளுக்கு முன்னுரிமை

 டாஸ்மாக் மதுபான கொள்முதலில் மாற்றம்: அதிகமாக விற்கும் சரக்குகளுக்கு முன்னுரிமை


ADDED : ஆக 06, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளுக்கான பீர் உள்ளிட்ட மதுபானங்களை கொள்முதல் செய்யும் நடைமுறையை, 'டாஸ்மாக்' நிறுவனம் மாற்றியுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், ஏழு மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும், 11 நிறுவனங்களிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளையும் கொள்முதல் செய்கிறது.

தி.மு.க., ஆட்சி யின்போது, அக்கட்சி ஆதரவாளர்கள் நடத்தும் நான்கு நிறுவனங்களிடம் இருந்து, 70 சதவீதம் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

அ.தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது தோழி சசிகலாவின் உறவினர்கள் நடத்தும் ஆலையில் இருந்தும், பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தி.மு.க., ஆதரவாளர்களின் நிறுவனங்களிடம் இருந்தும் அதிகளவில் மது வகைகள் வாங்கப்பட்டன.

தற்போது, த.வெ.க., ஆட்சியில், மது கொள்முதல் மற்றும் விற்பனையில் முறைகேடை தடுக்க நடவ டிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் அதிகளவில் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டு, எந்த மது வகைகள் அதிகம் விற்கின்றன என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்ப கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த மாதம், அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும், சம அளவில் கொள்முதல் செய்யப்பட்டன; 60 லட்சம் பெட்டி மது வகைகள், 26 லட்சம் பெட்டி பீர் வாங்கப்பட்டன.

இந்த மாதம், எந்தெந்த நிறுவன மதுபானங்கள் அதிகமாக விற்பனையானதோ, அதற்கு ஏற்ப, அந்த நிறுவனங்களிடம் இருந்து, 15 சதவீதம் வரை கூடுதலாக வாங்கப்படுகிறது.

இந்த நடைமுறையை பின்பற்றி, முதல் கட்டமாக 2 லட்சம் பெட்டி பீர், 5 லட்சம் பெட்டி மது வகைகள் கொள்முதல் செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us