தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தற்காலிக பணியாளர்களை நியமிக்க ‘டாஸ்மாக்’ முடிவு

தற்காலிக பணியாளர்களை நியமிக்க ‘டாஸ்மாக்’ முடிவு

தற்காலிக பணியாளர்களை நியமிக்க ‘டாஸ்மாக்’ முடிவு


UPDATED : நவ 24, 2026 10:06 PM

ADDED : நவ 24, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 10:06 PM ADDED : நவ 24, 2026 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கிடங்குகள், மண்டல, மாவட்ட அலுவலகங்களில் உள்ள காலியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமிக்க, ‘டாஸ்மாக்’ நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், சில்லரை கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்கும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மண்டல அலுவலகங்களும், 38 மாவட்ட மேலாளர் அலுவலகங்களும் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், மதுபான பெட்டிகளை இருப்பு வைக்கும் கிடங்குகளும் உள்ளன.

மண்டல, மாவட்ட அலுவலகங்களிலும், கிடங்குகளிலும் தற்போது போதிய ஊழியர்கள் இன்றி, காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால் பதிவேடு பராமரிப்பு, தலைமை அலுவலகம் இடையே, கடிதப் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய பணிகள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, காலியிடங்களில் தற்காலிக பணியாளர்களை நியமிக்க, மாவட்ட மேலாளர்களுக்கு அனுமதி வழங்கி, ‘டாஸ்மாக்’ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவர்களை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக மட்டுமே தேர்வு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us