'டாஸ்மாக்' பணியாளர்கள் இன்று காத்திருப்பு போராட்டம்
'டாஸ்மாக்' பணியாளர்கள் இன்று காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 16, 2025 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டாஸ்மாக்' கடை பணியாளர்கள் சங்கத்தினர், சென்னையில் இன்று தலைமை செயலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச் செயலர் தனசகேரன் கூறியதாவது:
மது கடை பணியாளர்கள் பணி பாதுகாப்பு இல்லாமல், தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குவதுடன், ஓய்வூதியமும் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதை வலியுறுத்தி, சென்னையில் இன்று, தலைமை செயலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

