தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு


ADDED : மே 14, 2025 05:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2025 05:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அதன் அடிப்படையில், கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இச்சோதனையில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடாசலபதி என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, டாஸ்மாக் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us