ADDED : அக் 09, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டா டா கேப்பிடல் நிறுவனத்தின் ஐ.பி.ஓ.,வுக்கு இரண்டு மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்நிறுவன பங்குகள் கேட்டு விண்ணப்பிக்க கடந்த 6ம் தேதி துவங்கிய அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்காக, 1.95 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கானதில் 3.42 மடங்கும்; நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 1.98 மடங்கும், சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் 1.10 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. வரும் 13ம் தேதி, இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.