6 லட்சம் விற்பனையை கடந்த டாடா பஞ்ச் எஸ்.யூ.வி., கார்
6 லட்சம் விற்பனையை கடந்த டாடா பஞ்ச் எஸ்.யூ.வி., கார்
ADDED : ஜூலை 22, 2025 08:07 AM

மும்பை : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், பஞ்ச் எஸ்.யூ.வி., கார், அறிமுகமான நான்கு ஆண்டு களில், ஆறு லட்சம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்திய வாகனத் துறை வரலாற்றில், குறைந்த காலத்தில், அதிக விற்பனைகளை குவித்த காராக, இது மாறியுள்ளது.
இந்த கார், 2021 அக்டோபரில் அறிமுகமானது. இது, ஹேட்ச்பேக் காரின் அளவில் இருந்தாலும், காம்பேக்ட் எஸ்.யூ.வி., கார் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது, மாருதியின் 'வேகன் ஆர்' காரை பின்னுக்கு தள்ளி, 2024ம் ஆண்டில் அதிகம் விற்பனையான காராக உருவெடுத்தது.
இந்த கார், பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில், ஐந்து ஸ்டார் பெற்றுள்ளது. பெட்ரோல், சி.என்.ஜி., மற்றும் மின்சார மாடல்களில் விற்பனை யாகிறது. சப் - காம்பேக்ட் எஸ்.யூ.வி., சந்தையில், 38 சதவீதம் சந்தை பங்கு வைத்துள்ளது.
மொத்த டாடா கார் விற்பனையில், 36 சதவீதம் பங்களிக்கிறது. இக்கார் 20க்கும் அதிகமான வாகன விருதுகளைப் பெற்றுள்ளது. ஆண்டு விற்பனை வளர்ச்சி, 15 சதவீதமாக அதிகரித்து உள்ளது.