டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் டாடா மனு விசாரணை தள்ளிவைப்பு
டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் டாடா மனு விசாரணை தள்ளிவைப்பு
ADDED : ஜூலை 13, 2011 12:19 AM

புதுடில்லி : நிரா ராடியா உடனான தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது.
தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் அரசியல் தரகர் நிரா ராடியா இடையிலான தொலைபேசி உரையாடல்கள், வருமான வரித்துறையினரால் ஒட்டுக் கேட்கப்பட்டது. ஆனால், இந்த ரகசிய உரையாடல்கள், ஊடகங்கள் வழியாக வெளியில் கசிந்தன. இதுகுறித்து ரத்தன் டாடா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். தனது மனுவில் அவர், 'இந்த உரையாடல்கள் அனைத்தும் மிகவும் கவனமாகப் பேசப்பட்டவை அல்ல; வழக்கம் போல இயல்பாக பேசப்பட்டவையே. அதனால் இவற்றைப் பெற்ற ஊடகங்கள் வெளியிடாமல் இருந்திருக்க வேண்டும். இது எனது அந்தரங்க உரிமையில் தலையிடுவதாகும். அதனால் இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரியிருந்தார். இவ்வழக்கை நேற்று விசாரித்த, நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச், விசாரணையை தள்ளிவைத்துள்ளது.