தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘கேக்’குகளை பாதுகாக்க பொறுப்பு ஆசிரியர் நியமனம்

‘கேக்’குகளை பாதுகாக்க பொறுப்பு ஆசிரியர் நியமனம்

‘கேக்’குகளை பாதுகாக்க பொறுப்பு ஆசிரியர் நியமனம்


UPDATED : நவ 06, 2026 07:18 PM

ADDED : நவ 05, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:18 PM ADDED : நவ 05, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வரும், 13ம் தேதி, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அனைத்து மாணவருக்கும் ‘கேக்’ வழங்க உள்ளதால், ‘கேக்’ வாங்க, பாதுகாக்க, வினியோகிக்க தனி பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும், 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. பள்ளிகள் விடுமுறை தினம் என்பதால், ஒரு நாள் முன்னதாக, 13ம் தேதி துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு ‘கேக்’ வழங்கப்பட உள்ளது. இதற்காக, 10ம் தேதி ஒவ்வொரு மாவட்ட உணவு மற்றும் நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும், 11,12ம் தேதி, பள்ளிகளுக்கு வட்டார அளவிலான பொறுப்பு அலுவலர் வாயிலாக பிரித்து அனுப்பப்படுகிறது.

இப்பணிகளை மேலாண்மை செய்ய முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உணவுத்துறை மண்டல பொறுப்பாளர் தலைமையிலான குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பணிகளை ஒருங்கிணைத்து பள்ளிகளுக்கு ‘கேக்’ அனுப்பி வைப்பர். ‘கேக்’ சேமிப்பு வைப்பது, குழந்தைகளுக்கு சரியான அளவில் வினியோகிப்பது என ஒவ்வொரு பள்ளிக்கு ஒரு பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரம், ‘கேக்’ சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us