தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்


UPDATED : அக் 14, 2026 09:08 PM

ADDED : அக் 14, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 09:08 PM ADDED : அக் 14, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான, மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஜெகதீசன், 46. இவர், தன்னிடம் படித்த மாணவி ஒருவருக்கு, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதில் மனமுடைந்த அந்த மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, ஆசிரியர் ஜெகதீசன், கடந்த செப்., 10ல், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீசன், ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி என்.ரமேஷ் முன் நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ஆர்.கமலநாதனும், அரசு தரப்பில் வழக்கறிஞர் கலீலும் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘பாலியல் வழக்கில் கைதான, ஆசிரியர் மாற்றுத்திறனாளி என்பதால், அவரது உடல் குறைபாட்டை கருத்தில் வைத்து, 25 ஆயிரம் ரூபாய்க்கு, இரு நபர் ஜாமின் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தினமும் காலை 10:30 மணிக்கு, விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக் கூடாது’ என்ற நிபந்தனையுடன், ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us