மாணவர்கள் தாக்கியதில் ஆசிரியர் படுகாயம்: மது போதையில் அட்டூழியம்
மாணவர்கள் தாக்கியதில் ஆசிரியர் படுகாயம்: மது போதையில் அட்டூழியம்
UPDATED : ஜூலை 16, 2025 10:21 PM
ADDED : ஜூலை 16, 2025 04:55 PM

சிவகாசி: சிவகாசியில் மது போதையில் வந்ததை தட்டிக்கேட்ட ஆசிரியர் மண்டையை மாணவர்கள் உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருத்தங்கல் சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளனர். அவர்களிடம் ஆசிரியர் சந்திரமூர்த்தி விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் மீது மது வாடை வந்துள்ளது. மது அருந்தினீர்களா என ஆசிரியர் கேட்டதற்கு அவர்கள் மறுத்தனர். இருப்பினும் சந்தேகம் அடைந்த ஆசிரியர், அவர்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து செல்ல முயன்றார். இதனால், மாணவர்கள் அவரின் மண்டையை உடைத்தனர். இதனையடுத்து சந்திரமூர்த்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் 2 மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.