தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காலை உணவை ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க உத்தரவு

காலை உணவை ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க உத்தரவு

காலை உணவை ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க உத்தரவு

4


UPDATED : செப் 26, 2026 06:13 AM

ADDED : செப் 26, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

4

UPDATED : செப் 26, 2026 06:13 AM ADDED : செப் 26, 2026 06:12 AM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் போது, அதன் தரத்தை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் அரசு நடுநிலை பள்ளியில், நேற்று முன்தினம் காலை, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரவா கிச்சடியில், பல்லி செத்து கிடந்துள்ளது. இதனால், உணவை சாப்பிட்ட மாணவர்கள் சிலருக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சமையலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றிக்கை: காலை உணவு சமைக்கும் சமையலறையில், சமையலுக்கான பொருட்களை தவிர, பிற பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். சமையலறை துாய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்.

சமையல் பாத்திரங்கள், உணவு பரிமாறும் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்னும், பின்னும், நன்கு சுத்தம் செய்ய வேண்டும் . சமைத்த உணவை மாணவர் களுக்கு பரிமாறுவதற்கு முன், அந்த உணவு தர மானதா என, ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

சமையல் செய்யும் போதும், சமைத்த பின்னும், பரிமாறுவதற்கு பிற பாத்திரங்களில் உணவை மாற்றிய பின்பும், மூடி வைத்த நிலையில், உணவு பாதுகாப்புடன் இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு உணவு பரிமாறும் பணியை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us