ADDED : நவ 09, 2024 10:32 PM
சென்னை:தொழில்நுட்ப உதவியாளர்கள் குழு அமைத்து, மாவட்டங்களில் பழுதான 'செட்டாப் பாக்ஸ்'களை சரி செய்து வருவதாக, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கம்:
திருவாரூர், சேலம், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பழுதான, செட்டாப் பாக்ஸ் களை சரி செய்ய, தொழில்நுட்ப உதவியாளர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, இதுவரை, 80 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளன.
ஆப்பரேட்டர்களின் வசதிக்காக, மேலும் சில மாவட்டங்களில் செட்டாப் பாக்ஸ் சர்வீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை விரைவில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வரும் 12ம் தேதி, அரசு தரப்பில் ஆப்பரேட்டர்களுடன் பேச்சு நடத்த யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை. எந்த சங்கமும் பேச்சு நடத்த அனுமதியும் கேட்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.