sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : சிறிய ஏற்றம் வர வாய்ப்பு தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : சிறிய ஏற்றம் வர வாய்ப்பு தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : சிறிய ஏற்றம் வர வாய்ப்பு தெரிகிறது


ADDED : ஜூன் 04, 2026 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 03:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

03-06-2026

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

விப்ரோ 203.90 -5.94

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 753.00 4.75

ஐ.டி.சி., 276.75 -6.50

எஸ்.பி.ஐ., 971.50 14.85

எட்டர்னல் 246.65 -4.10

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

என்.ஹெச்.பி.சி., 74.74 2.45

எஸ் பேங்க் 22.92 0.09

சுஸ்லான் எனர்ஜி 54.30 -0.22

அசோக் லேலண்டு 147.20 0.65

என்.எம்.டி.சி., 96.00 0.69

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

என்.பி.சி.சி., (இந்தியா) 102.09 -2.02

ஐநாக்ஸ் விண்டு 83.20 -1.08

ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் 602.00 -5.10

பந்தன் பேங்க் 207.10 0.77

வொக்ஹார்ட் 2,084.00 117.80

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

போரோசில் ரினீவபிள்ஸ் 546.65 45.30

அவென்யு சூப்பர்மார்ட்ஸ் 4,168.00 111.00

ஜே.பி.எம்., ஆட்டோ 671.40 24.05

லஷ்மி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் 165.00 14.33

ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் 217.00 7.41

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 23,415.95 23,459.65 23,151.50 23,405.60

நிப்டி

நேற்று 67 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 77 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறீடுகளில் 3 ஏற்றத்துடனும்; 15 இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.24 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 0.56 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 9 ஏற்றத்துடனும்; 12 இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.70 சதவீத உயர்வுடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 5.57 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,402 நிறுவனங்களின் பங்குகளில் 1,379 ஏற்றத்துடனும்; 1,915 இறக்கத்துடனும்; 108 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

வேகமான சரிவு மற்றும் சரிவில் இருந்து மீட்சி என்ற இரண்டும் நடைபெற்ற பின்னருமே முக்கிய குறுகியகால சராசரிகளான 10, 20, 50 (இ.எம்.ஏ.,) நாள் சராசரிகளுக்கு கீழ் தான் நிப்டி நிறைவடைந்துள்ளது.

மேலும், 200 நாள் இ.எம்.ஏ.,க்கு கீழேயும் இருப்பதால் டிரெண்டு பலவீனமாகவே இருக்கிறது எனலாம். ஆர்.எஸ்.ஐ., எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி., போன்ற மொமெண்டம் இண்டிகேட்டர்களும் இறங்குமுக போக்கு இன்னும் தொடர்வதையே சுட்டிக்காட்டுகின்றன.

ஸ்டொக்காஸ்டிக் ஆசிலேட்டர் சிறிதளவு ஓவர் சோல்டு என்ற நிலைமையை அடைந்திருப்பதால் குறுகிய கால ஏற்றத்திற்கான சிறியதொரு வாய்ப்பு தென்படுகிறது. 23,320ல் உடனடி சப்போர்ட்டும் 23,550ல் வலுவானதொரு ரெசிஸ்டென்ஸும் இருக்கிறது. 23,550க்கு மேல் நிலைத்து நிற்கும் பட்சத்தில் 23,650 - 23,700 வரை ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது.

சப்போர்ட்டை உடைத்து கீழே சென்றால் 23,000 என்ற லெவலை தொட்டு திரும்பக்கூடும். மொத்தத்தில் நிப்டி குறுகிய காலத்தில் இறக்குமுகத்திலேயே இருப்பினும், உருவாகியுள்ள சிறிதளவு ஓவர் சோல்டு நிலைமையின் காரணமாக இடைக்காலத்தில் ஏற்றம் அவ்வப்போது வந்து போகக்கூடும்.

ஆதரவு 23,215 23,025 22,915

தடுப்பு 23,525 23,645 23,750

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us