டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி குறுகிய எல்லைகளுக்குள் நகர வாய்ப்புள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி குறுகிய எல்லைகளுக்குள் நகர வாய்ப்புள்ளது
ADDED : ஜூலை 15, 2026 01:16 AM

14-07-2026
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி 50 (எண்ணிக்கை)
எட்டர்னல் 286.00 0.80
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 809.00 -8.95
டாடா ஸ்டீல் 188.74 1.63
ஓ.என்.ஜி.சி., 248.01 -0.44
கோட்டக் பேங்க் 378.10 -6.55
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 23.64 -0.14
சுஸ்லான் எனர்ஜி 52.43 -0.74
அசோக் லேலண்டு 155.11 -4.11
என்.எம்.டி.சி., 84.86 0.73
ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 113.53 -1.15
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
என்.பி.சி.சி., (இந்தியா) 98.19 -3.30
ஐநாக்ஸ் விண்டு 78.96 -2.13
ஆர்.பி.எல்., பேங்க் 376.95 -3.65
பந்தன் பேங்க் 207.90 -5.25
ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் 671.40 8.30
மற்ற சில பங்குகளின் விலை விபரம்
பயோகான் 437.00 26.05
கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 492.65 28.70
லஷ்மி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் 165.80 1.60
என்.டி.பி.சி., 348.75 -3.00
டாடா பவர் கம்பெனி 377.50 -0.35
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 24,068.00 24,157.10 24,023.70 24,052.05
நேற்றைய வர்த்தகத்தில் 143 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய நிப்டி, நாள் முழுதும் இறக்கத்துடனே காணப்பட்டது. வர்த்தக நிறைவில் 158 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிந்தது.
பரந்த சந்தை குறியீடுகள் 18ம் இறக்கத்துடன் காணப்பட்டன.
இவற்றில், 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.44 சதவீதம் குறைந்தும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிக பட்சமாக 1.08 சதவீதம் இறங்கியும் காணப்பட்டன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 1.03 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 1.97 சதவீத சரிவுடனும் முடிந்தன. வர்த்தகம் நடந்த 3,410 நிறுவனங்களின் பங்குகளில் 1,020 ஏற்றத்துடனும்; 2,277 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டி 14, 21 மற்றும் 50 நாள் இ.எம்.ஏ.,க்களுக்கு அருகேயே வர்த்தகமாகி வருவதால், குறிப்பிட்ட திசையில் தீர்மானமாக நகராமல் கன்சாலிடேஷன் நிலைமையே தொடர்கிறது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., கிட்டத்தட்ட சமநிலையையும், ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் ஒரளவுக்கு பாசிட்டிவ்வாகவும், எம்.ஏ.சி.டி., இன்னும் ஏற்றத்திற்கு தேவையான வேகம் உறுதியாகவில்லை என்பதையும் காட்டுகிறது.
எனவே, மொமென்டம் இண்டிக்கேட்டர்கள் நிப்டியில் கலவையான சிக்னல்களையே வெளிப்படுத்துகின்றன. உடனடி ரெசிஸ்டென்ஸ் 24,080 - 24,100 என்ற லெவலிலும், உடனடி சப்போர்ட் 24,000 மற்றும் 23,760லும் இருக்கின்றன.
தற்போதைய டெக்னிக்கல் சூழலில், நிப்டி 24,000 - 24,100 வரம்பை உடைத்து ஏதாவது ஒரு திசையில் தீர்மானமான நகர்வை மேற்கொள்ளும் வரை, குறுகிய எல்லைகளுக்குள் ஏற்ற இறக்கங்களுடன் நகரும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.
ஆதரவு 23,995 23,945 23,890
தடுப்பு 24,130 24,210 24,260
