டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 23,116க்கு கீழ் சென்றால் பலவீனம் அதிகரிக்க வாய்ப்பு
டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 23,116க்கு கீழ் சென்றால் பலவீனம் அதிகரிக்க வாய்ப்பு
ADDED : செப் 19, 2026 04:31 AM

18-09-2026
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 731.00 18.00
டாடா ஸ்டீல் 185.54 -1.75
விப்ரோ 166.83 0.43
இன்போசிஸ் 1,051.40 -7.20
டாடா மோட்டார்ஸ் பாசெஞ்சர் வெகிக்கிள்ஸ் 303.80 -10.70
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 22.72 -0.41
சுஸ்லான் எனர்ஜி 43.14 0.60
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 85.92 -0.41
ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 99.30 4.26
ஸ்விக்கி 273.05 -3.45
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
பந்தன் பேங்க் 175.00 3.50
டாடா கெமிக்கல்ஸ் 689.40 -89.90
ஐநாக்ஸ் விண்டு 76.80 2.70
ரெடிங்டன் 399.60 -0.50
ஹிந்துஸ்தான் காப்பர் 496.25 10.75
மற்ற சில பங்குகளின் விலை விவரம்
இ.ஐ.ஹெச்., 317.20 17.30
கிராபைட் இந்தியா 830.00 15.90
ஐ.ஆர்.சி.டி.சி., 477.00 20.00
லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் 106.90 2.84
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா 177.33 2.32
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 23,334.70 23,389.15 23,286.60 23,346.40
நேற்று 64 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி தொடர்ந்து சிறு சிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து நாளின் இறுதியில் 75 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு அதிக பட்சமாக 1.74 சதவீதமும், 'நிப்டி100' குறியீடு குறைந்த பட்சமாக 0.50 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 16 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி சிமென்ட்' குறியீடு அதிக பட்சமாக 1.90 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 1.03 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,653 நிறுவனங்களின் பங்குகளில் 2,387 ஏற்றத்துடனும்; 1,154 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
கடந்த சில நாட்களில் நிப்டி இறக்கத்தில் இருந்து மீட்சியடைந்துள்ள சூழலில் நிப்டியின் மத்திம கால டெக்னிக்கல் நிலைமை இறக்கமோ அல்லது பெரிய மாறுதலோ இல்லாது இருக்கக்கூடிய வாய்ப்பையே காட்டுகிறது.
ஆனாலும், நிப்டியின் குறுகிய கால டெக்னிக்கல் சூழல் இன்னமும் பலவீனமாகவே இருக்கிறது. ஸ்டோக்காஸ்ட்டிக் இண்டிக்கேட்டர் குறுகிய காலத்தில் சற்று மீட்சி காண வாய்ப்பு இருப்பதை காட்டுகிறது.
ஆர்.எஸ்.ஐ., 33.66 என்ற அளவிலும், ஆர்.ஓ.சி., -2.95 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி., -244.82 என்ற அளவிலும் இருப்பது ஒட்டுமொத்த சந்தை வேகம் இன்னும் மந்தமாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.
உடனடி ரெசிஸ்டென்ஸ் 23,400 என்ற அளவில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 23,575-23,950 என்ற அளவில் ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. 23,116-ல் முக்கிய சப்போர்ட் இருக்கிறது.
நிப்டி 23,400-க்கு மேல் சென்றால் மட்டுமே மீட்சி வலுப்பெற வாய்ப்புள்ளது. 23,116-க்கு கீழே சென்றால் நிப்டியில் பலவீனம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆதரவு 23,290 23,240 23,200
தடுப்பு 23,395 23,445 23,480
