sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/தொழில்நுட்ப கோளாறு: பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

தொழில்நுட்ப கோளாறு: பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

தொழில்நுட்ப கோளாறு: பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு


UPDATED : டிச 07, 2024 10:07 PM

ADDED : டிச 04, 2024 03:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2024 10:07 PM ADDED : டிச 04, 2024 03:41 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்துள்ள இரு செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி.,-சி59 ராக்கெட் ஏவுவது நாளை மாலை 4:12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செயற்கைக்கோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடிவை இஸ்ரோ எடுத்துள்ளது.

நம் நாட்டின் தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக, செயற்கைக்கோளை வடிவமைக்கும் இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன், அவற்றை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இது தவிர, வருவாய் ஈட்டும் வகையில் வணிக நோக்குடன், வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களையும், விண்ணில் இஸ்ரோ செலுத்துகிறது.

அதன்படி, தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், 'புரோபா - 3' என்ற பெயரில் இரு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது. இவை, சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வுசெய்ய உள்ளன.மொத்தம், 550 கிலோ எடை உடைய அந்த செயற்கைக்கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் இன்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் பாய இருந்தது.

இதற்கான, 25 மணி நேர, 'கவுன்ட் டவுன்' நேற்று பிற்பகல், 3:08 மணிக்கு துவங்கியது. ராக்கெட்டின் இயக்கம் மற்றும் செயல்பாடுகளை, இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர்.

அதில், செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து பி.எஸ்.எல்.வி.,-சி 59 ராக்கெட் ஏவுவது நாளை மாலை 4:12 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us