தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
ADDED : ஜன 17, 2025 05:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் இருந்து கிளம்பிய இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், சென்னையில் இருந்து 3.54 மணிக்கு அசாம் தலைநகர் கவுகாத்திக்கு கிளம்பியது. விமானத்தில் 154 பயணிகள் மற்றும் 8 பேர் இருந்தனர். விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இது தொடர்பாக சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, விமானத்தை சென்னையில் தரையிறக்க அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து அவசரமாக 4.28 மணிக்கு மீண்டும் சென்னையிலேயே அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.