தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை 3 டிகிரி உயர வாய்ப்பு
தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை 3 டிகிரி உயர வாய்ப்பு
ADDED : பிப் 17, 2025 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இன்றும், நாளையும், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும், 22ம் தேதி வரை வறண்ட வானிலை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.