தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்

 உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்

 உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்


ADDED : செப் 02, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 06:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:

தமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதனால், இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல், மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில், ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும். அதேசமயம், வரும் 5ம் தேதி வரை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us