ADDED : பிப் 15, 2024 10:45 PM
சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு, கோவில் நகைகளை உருக்கி டிபாசிட் செய்த வகையில், ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும், இத்திட்டம் முழுமை பெறும் போது, 25 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தங்கத்தை இருப்பு வைத்துள்ள முழு விபரம், அதற்கான வட்டி விகிதம், கிடைக்கும் வருவாய், எங்கு எதற்கு செலவிடப்படுகிறது போன்றவற்றை, பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை. நாடு சுதந்திரம் அடைந்த பின், தமிழகத்தில் கடந்த, 75 ஆண்டுகளில் கோவில் சொத்துகள் அனைத்தும் சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றன. கோவில் விக்ரகங்கள் களவாடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.
கோவில் நகை உருக்கும் திட்டம் பற்றி முழுமையான வெள்ளை அறிக்கையையும், கோவில் முறைகேடுகள் மற்றும் விக்ரக கடத்தல் வழக்குகள் பற்றிய முழு அறிக்கையையும், தற்போது, நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும்.
- காடேஸ்வரா சுப்ரமணியம்,
ஹிந்து முன்னணி மாநில தலைவர்.