கோயில் நிலம் விற்ற விவகாரம் : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
கோயில் நிலம் விற்ற விவகாரம் : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 04, 2024 03:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலின் 200 ஏக்கர் நிலத்தை விற்றது தொடர்பான புகார் தொடர்பாக, உரிய பரிசீலனை செய்து 6 வாரங்களில் நடவடிக்கை எடுக்கும்படி, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கோயிலின் விவசாய நிலங்கள் தனி நபருக்கு விற்கப்பட்டதாகவும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோயில் வந்த பிறகே இது தெரியவந்ததாகவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.